86 வயது பெண்மணியின் வாழ்வை இருளாக்கிய இரவு..!!

3 months agoபிரம்டன் ஈஸ்ட் யோர்க் பகுதி புரோட்வியூ அவனியூ மற்றும் மோர்டைமர் அவனியூவில் நேற்று இரவு எட்டு மணியளவில்  இடம்பெற்ற வீதி விபத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புரோட்வியூ அவனியூ பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற போது, அந்த வீதி வழியே வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் ஒன்று வயதான பெண்மணி மீது மோதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊன்று கால்களின் உதவியுடன் அந்த பகுதி வீதியைக் கடக்க முயன்ற போதே இவ்வாறு சிக்குண்டு விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து, சுயநினைவற்று கிடந்த அவரை, அவசர மருத்துவப் பிரிவினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் தரித்திருந்ததாக தெரிவித்துளள காவல் துறையினர், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.GET UPDATES