ரொறொன்ரோ கிழக்கு பகுதியில் பயங்கரம்... வீடொன்றினுள் விபரீத பொருள்களா..?

3 months agoரொறொன்ரோ கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 33க்கும் அதிகமான துப்பாக்கிகள் கைபற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் எந்த சம்பவத்தை நிகழ்த்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

வீடொன்றிற்குள் இருந்து வெளிப்பட்ட கார்பன் மொனொக்சைட் அலாம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் சென்ற போது சந்தேகத்திற்கிடமான வீட்டின் நிலக்கீழ் பகுதியில் சிலவற்றை கண்டு பிடித்துள்ளனர். கண்டதும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிக்கரிங்,ஒன்ராறியோவில் 33 வயதுடைய மனிதன் மீது  ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட 337 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாண பொலிஸ் இரகசிய ஆய்வக குழுவினரின் உதவியுடன் அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றுடன் 33 துப்பாக்கிகள் மற்றும் தடை செய்யப்பட்ட சாதனங்கள் மிதமிஞ்சிய மகசீன்கள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
GET UPDATES