'தீபாவளி' தபால் தலை: இந்தியா, கனடா ஒருசேர வெளியீடு..!!

3 months agoதீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தபால் தலை வெளியிட இந்தியா, கனடா அரசாங்கம் முடிவு செய்தது. இதனையடுத்து, இரு நாடுகளின் தபால் துறைகளும் இவ்விவகாரம் தொடர்பாக கூட்டாக உடன்படிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக இந்தியா, கனடா நாடுகள் இந்த தபால் தலையை கூட்டாக வெளியிட்டது.

கனடாவில் வாழும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையிலான கலாசாரத்தின் சின்னமாகவும் தீபாவளி பண்டிகை குறிக்கப்படுகிறது.

கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகிப்பதன் மூலம் இந்திய மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் புகழ் தேடிக்கொடுக்கும் திரு தீபக் சொப்ராவின் கடுமையான முயற்சியினாலும் அவரது உயர் அதிகாரிகளின் அதீத சிரத்தையின் காரணத்தினால் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு இடம்பெறுகின்றது என்று அங்கு உரையாற்றிய ரொரென்ரோ நகர மேயர் உரையாற்றும்போது தெரிவித்தார்.
GET UPDATES