ஆசிரியர் உயிரை பறித்த திரவகம்.. நீதிபதி முன்னிலையிலேயே நீதிமன்றத்தில் நேர்ந்தது..?

3 months agoமனவிரக்தி என்பது சில வேளைகளில் நினைத்து பார்க்க முடியாத செயல்களை கூட செய்ய வைத்து வாழ்வின் பாதையை மாற்றி விடும், சில சமயங்களில் வாழ்வையே முடித்து விடும்.

அதனை தகுந்த வழிமுறைகள் கொண்டு ஆதரவும், அரவணைப்பும் பாதிக்கப்பட்ட நபருக்கு அளித்தால் மட்டுமே அதில் இருந்து மீள கொண்டுவர முடியும்.

அந்த வகையில் ஒரு சம்பவம் மனவிரக்தியின் காரணமாக கியூபேக்கில் இடம்பெற்றுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஆறு மாதகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இராசாயனவியல் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

நிக்கோலா பட்ரேவ் என்ற ஆசிரியரே இவ்வாறு ஒருவித திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கியூபேக் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை நேற்று முன்தினம் கியூபேக் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது, அவர் தமது உடலில் ஒழித்து வைத்திருந்த ஒருவகை திரவத்தை நீதிபதிக்கு முன்னால் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

52 வயதான பட்ரேவ் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில்  கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவரது வீட்டில் இருந்து அதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
GET UPDATES