15 நிமிடத்தில் 25 லட்சம் கேட்கும் ஓவியா..!! சரவணா ஸ்டோர் அதிபருடன் இணைகிறாரா..??

3 months agoபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனியார் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்றவர் ஓவியா. இதில் அவரது குணாதிசயங்கள் அனைவருக்கும் பிடித்துபோகவே, இவருக்கு அனைவரும் ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன், சமூக வலைதளங்களில் அவ்வப்போது படங்களை பகிர்ந்து வந்தாலும், படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், சென்னை ஓஎம்ஆரில் துவங்க உள்ள சரவணா ஸ்டோர்ஸின் புதிய கடைக்கான விளம்பரத்தில் ஓவியா நடித்துள்ளார்.

மேலும், அந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதாகவும் கூறியுள்ளார். சரவணா ஸ்டோர்ஸின் முந்தைய விளம்பரங்களில் தமன்னா மற்றும் ஹன்சிகா போன்றோர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
GET UPDATES