எட்டிப் பார்த்துவிட்டு வந்த கவர்னர் என்ன சொல்லப் போகிறார்..?

3 months agoபுலனாய்வு கொள்கை, குற்றவாளி, ஏதாவது தடயத்தை விட்டு செல்லாமல் குற்றம் புரிவதில்லை என்கிறது. உண்மை ஒரு நாள் வெளியே வந்தே தீரும்.

ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை; பொய் சொன்னதற்கு மன்னித்துவிடுங்கள்: என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு, நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையே மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் குடகில் பேட்டியளிக்கிறார்.

என்னையே பார்க்கவிடலைன்னு அன்னைக்கே ஜனங்க கிட்ட சசிகலா சொல்லியிருக்கலாமே. டிசம்பர் 5ந் தேதி வரைக்கும் வாயே திறக்கலையே ஏன்?

மீண்டும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை பெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளது; சசிகலா ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது என்கிறார் டிடிவி தினகரன்.

ஜெயலலிதா என்ன, தனி குடும்பத்து சொத்தா? இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது மறைந்தவர்.

அவர் சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட சட்ட உரிமையோடு மறுக்க சசிகலா என்ன, ஜெயலலிதாவின் ரத்த சம்மந்த உறவா? இவரிடம் ஏன் ஒப்புதல் பெறவேண்டும்.?

அச்சமயம் எய்ம்ஸ் மருத்துவக்குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரமும் சசிகலாவிடம் தான் இருந்தது என்ற உண்மையும் வெளிவர இருக்கிறது.
GET UPDATES