ரொறொன்ரோவில் சிறுவர்களை சுத்தியால் அடித்து கொலை முயற்சி..?

2 months agoசிறுவர்கள் கூட என்று பார்க்காமல் ஒரு முதியவர் சிறுவர்களின் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ரொறொன்ரோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரொறொன்ரோவை சேர்ந்த 53-வயதுடைய மனிதனொருவர் இரண்டு சிறுவர்களை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மீது, கொலை செய்ய முயன்றது, கொடுமை படுத்தியது மற்றும் மூச்சு திணற செய்தமை ஆயுதத்தால் தாக்கியமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

நோர்த் யோர்க் பிராந்தியத்தில் ஜேன் வீதி மற்றும் Steeles அவெனியு மேற்கில்  இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரு சிறுவர்களும் 10-வயதிற்குட்பட்டவர்களாவர். குறிப்பிட்ட மனிதன் பிள்ளைகள் இருவருடனும் வீட்டில் இருந்ததாகவும் இருவருக்கும் சுத்தியலால் தலையில் அடித்ததாகவும் அவர்களை பின்னர் மூச்சுத்திணற செய்ததாகவும் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிள்ளைகள் இருவரும் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் சுகமடைந்து வருகின்றனர்.GET UPDATES