அவுஸ்ரேலிய வீரர்கள் சென்ற பேரூந்து மீது கல்வீச்சு!

2 months agoஇந்திய அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி முடிவடைந்த பின்னா் விடுதிக்கு திரும்பிய அவுஸ்ரேலிய வீரர்களின் பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ஞ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் ”நாங்கள் பயணித்த பேரூந்தின் கண்ணாடி உடைந்திருப்பதால் நாங்கள் சிறு அச்சத்தில் இருக்கின்றோம்” என புகைப்படத்துடன் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

இத்தாக்குதல் இனந்தெரியாத சிலராலேயே நடத்தப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

GET UPDATES