115 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணி விசித்திர சாதனை!

a week agoபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் 115 வருடங்களுக்கு பிறகு புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது.

இந்த டெஸ்ட் வெற்றியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 115 வருடங்களுக்கு பிறகு 3வது இன்னிங்ஸில் குறைந்த அளவு ஓட்ட எண்ணிக்கை குவித்து வெற்றிபெற்ற முதல் அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொண்டது.

அத்தோடு இலங்கை அணி எதிர்கொண்ட முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றிக்கொண்டு வரலாற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES