பதட்டமான நிலைக்கு மத்தியில் ட்ரூடோவின் விஜயம்..!!

2 months agoஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல பெண்மணி மெலநியா டிரம்ப் இருவரும், கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் இவரது மனைவி  Sophie Gregoire ட்ரூடோ இருவரையும் நேற்று வெள்ளை மாளிகையில் அன்புடன் வரவேற்றனர்.

வெள்ளை மாளிகையின் வெளியே கமராக்கள் பளபளக்க டிரம்பும் ட்ரூடோவும் கைகளை குலுக்கி கட்டியணைத்தனர்.

பிரதம மந்திரியும் Gregoire ட்ரூடோவும் முதல் பெண்மணிக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

NAFTA பேச்சு வார்த்தைகள் குறித்த பதட்டமான நிலைக்கு மத்தியில் ட்ரூடோவின் வாசிங்டன் விஜயம் அமைந்துள்ளது.

NAFTA பேச்சுவார்த்தை தோல்வியுறின் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தம் குறித்து நேரடியாக கனடாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாக புதன்கிழமை டிரம் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் ட்ரூடோ முதன்முதலாக  வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த போது இருவருக்குமிடையில் ஏற்பட்ட சந்திப்பு தருணத்தில் இருந்து சமூகவலைதளங்களில் வெகுவாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

GET UPDATES