சாதாரண மனிதர்களை விட ஆயிரம் மடங்கு சக்தி... அபூர்வ சக்தி கொண்ட மனிதர்..!!

2 months agoபிறந்த போதிலிருந்தே இருக்கும் கண்புரை நோயால் நபர் ஒருவருக்கு பகலில் கண் தெரியாமலும், இரவில் சாதாரண மனிதர்களை விட ஆயிரம் மடங்கு சக்தி கொண்ட கண் பார்வையும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் நோவா ஸ்கோடியாவை சேர்ந்தவர் டிம் டூஸெட். இவர் பிறந்த போது congenital cataracts என்ற விசித்திர கண்புரை நோய் இருந்துள்ளது.

இதையடுத்து டிம்முக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கருவிழி மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ஒரு வித்தியாசமான மாற்றம் நிகழ்ந்தது.

பகலில் டிம்மின் பார்வை வெறும் பத்து சதவீதம் தான். தட்டுதடுமாறி தான் தனது வேலைகளை செய்வார். அதே நேரத்தில் அவருக்கு எல்லாமே வெள்ளை நிறமாக தான் தெரியும். இதன் காரணமாக டிம் எப்போதும் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பார்.

ஆனால், இரவு வந்துவிட்டால் போதும். டிம்மின் கண் பார்வை சாதாரண மனிதர்களை விட ஆயிரம் மடங்கு அதிகரித்துவிடும்.

முதலில் இந்த அபூர்வ சக்தியை டிம் உணராத நிலையில், ஒருநாள் இரவு மொட்டை மாடிக்கு வந்து வானத்தை பார்த்தார்.

லட்சம் மின்மினிப் பூச்சிகள், ஆயிரமாயிரம் மின் விளக்குகள் எல்லாம் வானத்தில், அதுவும் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது டிம் கண்களுக்கு தெரிந்தது.

சிறிது நேரம் அதைப் பார்த்த பின்பு தான் உண்மையை உணர்ந்தார். அது பூச்சிகளும் இல்லை, விளக்குகளும் இல்லை, அதுதான் நம் பால்வெளி மண்டலம்!

ஆம். அதீத வெளிச்சத்தை அவர் கண்கள் தங்கு தடையின்றி உள்வாங்குவதால் அவரால் நம் கண்ணிற்கு கூடத் தெரியாத நட்சத்திரக் கூட்டம் முதல் எண்ணற்ற வானியல் நிகழ்வுகள் இயல்பாகவே தெரியத் தொடங்கியது.

தனது அற்புத சக்தியை உபயோகமாக பயன்படுத்த முடிவு செய்த டிம் ’டீப் ஸ்கை ஐ’(Deep Sky Eye) என்ற பெயரில் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றைக் கட்டினார்.

அங்கிருந்து பல வானிலை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை செய்தார்.

விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத பல விடயங்களை தனது கண்கள் மூலம் டிம் பார்த்தார்.இவர் மனைவிக்கும் கண் தெரியாது என்பதால் இரவில் தன் ஆராய்ச்சியின் போது மனைவியையும் அழைத்துச் சென்று தான் பார்ப்பதை குறித்து விளக்குவார்.

டிம் கூறுகையில், சிறுவயதில் எனக்கு பார்வையில்லை என பலர் கிண்டல் செய்வார்கள். ஆனால் தற்போது வானில் எல்லோரும் பார்க்காததைக் கூட என்னால் பார்க்க முடிகிறது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
GET UPDATES