அமெரிக்க, கனடா மக்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுவது சன்னி லியோன் கையில்..?

2 months agoசொகுசு கார் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் மஸராட்டி காரை சன்னி லியோன் வாங்கியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழும் சன்னி லியோன், மஸராட்டி கிபிலி நெரிசியோமோ என்ற காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.1.36 கோடி என்று கூறப்படுகிறது.

மஸராட்டி கார் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்து கொடுக்கிறது. இந்த கார்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில், அமெரிக்க, கனடா மக்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

மஸராட்டியின் தீவிர ரசிகையான சன்னி லியோன், தனக்கே உரிய மாற்றங்களுடன் காரை வாங்கியுள்ளார். 20-இஞ்ச் அலாய் சக்கரங்கள், கருப்பு நிற வெளித்தோற்றம், ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிஃப்ட்டர்ஸ், முன் இருக்கைக்காக 12 வித பவர் மாற்றங்கள், முன் மற்றும் பின்புற வாகன உணர்வுக் கருவிகள், ரிமோட்டால் இயங்கும் ஸ்டார்ட் அமைப்பு உள்ளிட்டவை கொண்டுள்ளது.

மேலும் 3 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சின், 345 பிஎச்பி மற்றும் 404 பிஎச்பி பவர் கிடைக்கும். 100 கி.மீ வேகத்தை 5.6 விநாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 265 கி.மீ வேகத்தில் செல்லும்.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் பிறந்த குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், தனது மகளுக்கு பரிசாக வழங்க வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
GET UPDATES