மின்னல் தாக்கி சரிந்து விழுந்த மின்சார கடத்தி தூண்!

2 months agoபுளியங்குளம் ஏ9 வீதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக காணப்படும் மின்சார கடத்தி தூண் மின்னல் தாக்கத்தின் காரணமாக சரிந்து விழுந்துள்ளது.

வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அதி உயர் மின்சார கடத்தியின் கம்பி மீது மின்னல் தாக்கியதில் தூண் சரிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக வீதியில் அருகே மின்சார கம்பி நிலத்தில் காணப்படுவதனாலும், தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையாலும் பொதுமக்களை மின்சாரம் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதுகாப்பு பணியில் பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளதுடன், இலங்கை மின்சார சபைக்கும் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மணிநேரமாக இலங்கை மின்சார சபைக்கு தகவல் வழங்கியுள்ள போதிலும் இது வரை மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த பாதையூடான போக்குவரத்து ஒருவழியாக மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES