25 ஆண்டுகளுக்கு பின்னர் தாயகம் திரும்பிய ஈழத்தமிழர்கள்!

2 months agoஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவின் - தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் 55 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரனையோடு குறித்த அனைவரும் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 19 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் 22 பெண்களும், 12 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயகம் திரும்பிய அனைவரும் வடக்கு - கிழக்கில் உள்ள அவர்களது சொந்த இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் யுத்தம் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் பகுதியில் இருந்து படகு மூலமாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றவர்கள் என தெரியவருகின்றது.

இவர்களுக்கான இலவச விமான டிக்கட்டுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படுள்ளது. மேலும் வாழ்வாதாரத்திற்கு தேவையான ஆரம்ப கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

GET UPDATES