நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை வழக்கின் தீர்ப்பு..!!

2 weeks ago



உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தநகர் மாவட்டம் நொய்டா பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகியோரது 14- வயது மகள் ஆருஷி.

கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டில் உள்ள தனது அறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமராஜ்(45) தான் இக்கொலையை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகித்தனர்.

ஆனால், திடீர் திருப்பமாக மறுதினமே வீட்டின் மொட்டை மாடியில் ஹேமராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை செய்தது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ஆருஷியின் தந்தையான பல் டாக்டர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 2013-ம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு இன்று வெளியாகிறது. ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.












GET UPDATES