என்னால முடியல சாமி முடிச்சு விட்டுருங்க..!! கையை கோர்த்து முதுகில் குத்திய எடப்பாடி…!

2 months agoடெல்லியில் இன்று பிரதமரை சந்தித்த ஓபிஎஸ் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து விரிவாக விளக்கி உள்ளார்.

பிரதமர் மோடியும், ஓபிஎஸ்சும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு அம்சங்களை விவாதித்ததாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம், குட்கா ஊழல் மற்றும் ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்குகளால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து பேசியதாகவும்,

அதனை தொடர்ந்து சசிகலா பரோலில் வந்ததையொட்டிய நிகழ்வுகள் குறித்து ஓபிஎஸ் விவரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஆட்சி ரீதியாக முக்கிய முடிவுகளில் தனது பங்களிப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும், இதனால் தன்னை நம்பிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் மோடியிடம் ஓபிஎஸ் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள்.

துணை முதல்வராக பதவியேற்றபிறகு, பிரதமரை ஓபிஎஸ் சந்தித்தது இதுதான் முதல் முறையாகும்.

எனவே அதற்கான வாழ்த்து பெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் தமிழக அரசு வட்டாரங்களில் இதை குறிப்பிடுகிறார்கள்.

அரசியல் வட்டாரமோ, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான் என்றால், முதல்வரும் துணை முதல்வருமே கைகோர்த்தபடி டெல்லிக்கு போயிருப்பார்கள்.

ஏனென்றால், பிரதமரை சந்திப்பதைவிட, எடப்பாடிக்கும் வேறு பெரிய வேலைகள் இல்லை. ஆட்சி ரீதியாகவும் கட்சி ரீதியாகவும்,

தான் புறக்கணிக்கப்படுவதை பட்டியலிடவே இந்தப் பயணத்தை ஓபிஎஸ் பயன்படுத்திக் கொண்டார்’ என்கிறார்கள் அவர்கள்.
GET UPDATES