'கலக்சி நோட் 7' பயன்பாட்டை நிறுத்துமாறு சம்சுங் கோரிக்கை

2 months ago'கலக்சி நோட் 7' ஸ்மாட்போன் கையடக்க தொலைபேசி தீப்பிடிக்கும் சம்பவங்கள் புதிய ஆய்வறிக்கை ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதை நிறுத்தும்படி உலகெங்கும் உள்ள உரிமையாளர்களை சம்சுங் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தென்கொரிய மின்னணு நிறுவனமான சம்சுங் தனது கலக்சி நோட் 7 விற்பனை அனைத்தையும் நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. ஸ்மாட்போனின் பெட்டரிகள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பதிவானதை அடுத்து கடந்த செப்டெம்பரில் சம்சுங் 2.5 மில்லியன் கையடக்க தொலைபேசிளை மீளப் பெற்று பாதுகாப்பான மாற்று சாதனைங்களை மீண்டும் வழங்கியது.

எனினும் மாற்றாக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளும் தீப்பிடுக்கும் சம்பவங்கள் பதிவாயின. மாற்றாக வழங்கப்பட்ட நோட் 7 கையடக்க தொலைபேசி தனது அறையில் வைத்து தீப்பிடித்து எரிந்ததாக கன்டக்கியை சேர்ந்த ஒருவர் புகார் கூறியதோடு அமெரிக்க உள்ளூர் விமானத்திற்குள் புதிய கையடக்க தொலைபேசியில் இருந்து புகை கிளம்பிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது.

வாடிக்கையாளர்களின் மாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து உலகம் முழுவதும் உள்ள தனது தொழில் கூட்டளிகள் கலக்சி நோட் 7 விற்பனையை உடன் நிறுத்துமாறு சம்சுங் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவோர், பேட்டரியை சார்ஜ் செய்யவேண்டாம் என்றும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.

அண்மையில் வெளியான ஆப்பிள் ஐ போனின் மொடலுக்குப் போட்டியாக தனது கேலக்ஸி நோட் செவன் போனை அறிமுகப்படுத்திய சம்சுங் நிறுவனத்திற்கு அந்த ஸ்மாட்போனில் ஏற்பட்ட பிரச்சினைகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

GET UPDATES