விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஆரம்பம்

2 months agoவிக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி தற்போது, `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அது மாத்திரமல்லாது, `சீதக்காதி’, `சயீரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக `ஜுங்கா’வில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். `ஜுங்கா’ படத்தை ஏற்கெனவே, விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

`இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஏ&பி குரூப்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

GET UPDATES