அப்பம் நிகழ்ச்சி நிரலை பயன்படுத்த பசில் திட்டம்!

2 months agoஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்காக அப்பம் நிகழ்ச்சி நிரலை பயன்படுத்த போவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்கூட்டியே அறிவிக்காது அரசாங்கத்தில் இருந்து வெளியேற அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் போது பிரதிபலன்களை காண முடியும். கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் போது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 90 வீதமானவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

GET UPDATES