அரசாங்கத்தின் செயற்பாடுகள் முரண்பாடுகளே!

a week agoவவுனியாவில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அநுராதபுரத்திற்கு மாற்றியதால், தேவையற்ற முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் கொடூரமானதென சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே இலங்கையில் அரசியல் கைதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசியல் கைதிகளை பல வருடங்களாக இவ்வாறு தடுப்பில் வைத்துள்ளமை, அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு, தடுப்பில் உள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இக் கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

GET UPDATES