புண்ணியம் தேடிச் சென்றார் பிரதமர்!

2 months agoமத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய வங்கி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மஹேந்திரன் எனக்கு ஒன்றும் தெரியாது பிரதமரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டாலே மோசடிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டை துண்டாடும் செயற்பாடுகளை முன்னெடுத்து முறைகேடான ஆட்சியினை பிரதமர் நடத்தி வருகின்றார் எனக் குறிப்பிட்ட விமல், அதனை சரி செய்து கொள்வதற்காக புண்ணியங்களைத் தேடி ரணில் பின்லாந்துக்கு சென்று வந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வருடம் முடிவு பெறுவதற்குள் எட்கா ஒப்பந்தத்தை செயற்படுத்தல், நாட்டை துண்டாடும் அரசியலமைப்பை கொண்டு வருதல், அவசரமாக பல கொள்ளைகளில் ஈடுபட்டு கொள்ளுதல் போன்ற விடயங்களைச் செயற்படுத்த அரசு முயற்சி செய்கின்றது என்ற ஓர் ஆபத்து எச்சரிக்கையினையும் நாட்டு மக்களுக்கு நாம் விடுக்கின்றோம் எனவும் விமல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த வருடம் மிக முக்கியமான வருடமாகும், அதனால் மக்கள் தமது கடும் எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுத்தி, அதனை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் விமல் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

GET UPDATES