கல்முனைக்குடியில் கத்தி குத்தில் ஒருவர் பலி!

2 months agoகல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி சாய்பு வீதியில் நடைபெற்ற வீதி விபத்தின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியினால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்றை12 திகதி மாலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் வண்டிகளுக்கிடையில் ஏற்பட்ட விபத்தின் போது 33 வயது மதிக்கத்தக்க கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார் அதன் பின்னர் வீதி விபத்து கல்முனை பொலிஸாரினால் சமாதானம் செய்யப்பட்டுள்ளது பின்னர் குறித்த பிரதேசத்திற்கு சென்ற காயமடைந்த நபர் விபத்தை ஏற்படுத்திய நபரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது அதன் விளைவாக  24 மதிக்கத்தக்க உதுமான் லெப்பை மொகமட் சாஹீர் என்பவர் மீது கூரிய கத்தியினால் தாக்கப்பட்டு அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கத்தியால் தாக்கிய நபர்  கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் கல்முனைப் பொலிஸாரினால் நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டனர்.

(ஊடகவியலாளர் - டினேஸ்)

GET UPDATES