பொலித்தீன் தடைக்கு பொதுமக்கள் ஆதரவு!

2 months agoபொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த விபரம் கிடைத்துள்ளதாக லால் மேர்வின் தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மதம் முதலாம் திகதி நாட்டில் பொலித்தீனை தடை செய்யப்பட்டதில்  இருந்து, முதல் 6 வாரங்களாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த ஆய்வை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES