வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தினை புறக்கணித்த அரச அதிகாரிகள்!

2 months agoவவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தினை அரச திணைக்கள அதிகாரிகள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டம் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை)   இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், விவசாய திணைக்கள பணிப்பாளர், கல்வியல் கல்லூரி அதிகாரிகள், வனவிலங்கு பரிபாலசபை பொறுப்பதிகாரி, வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர், மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாக காணப்பட்டதுடன்இபிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கு உயர் அதிகாரிகள் இன்மையினால் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் எதிர் வருகின்ற கூட்டங்களுக்கு சமூகமளிக்க தவருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

GET UPDATES