காங்கிரஸ் குழுமத்தில் நுழைந்தார் ரம்யா!

2 months agoகாங்கிரஸின் சமூக வலைத்தள குழு தலைவராக, பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் இக் குழுவிற்கு தீபந்தர் சிங் ஹூடா என்பவர் தலைவராக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது ரம்யாவை நியமித்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி மறுசீரமைப்பு பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நியமனம் அமைந்துள்ளதென காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காங்கிரஸ் தொடர்பான செய்திகள் மட்டுமன்றி சமூக பிரச்சினைகள் தொடர்பாகவும் ரம்யா, சமூக வலைத்தளங்களில் துணிச்சலுடன் குரல்கொடுத்து வருவதால், காங்கிரஸ் அவரை தெரிவுசெய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

GET UPDATES