‘மெர்சல்’ படம் தொடர்பில் உண்மையை வெளியிட்ட நாயகி!

2 months ago‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மூன்று நாயகிகளில் தனது கதாபாத்திரம் என்னவென்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் இன்று மனம் திறந்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. எனினும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் `மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து காஜல் அகர்வால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது “இந்த படத்தில் எனக்கும் விஜய்க்கும் காதல் காட்சிகள் நிறைய உள்ளன. கதைப்படி மருத்துவர் வேடத்தில் வரும் விஜய்க்கு ஜோடியாக நானும் மருத்துவத் துறையில் உள்ள ஒரு பெண்ணாக நடித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

GET UPDATES