நத்தார் தினத்தில் ‘ஸ்கெட்ச்’ படத்தை வெளியிட திட்டம்!

2 months agoவிக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை நத்தார் தினத்தில்  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்‘. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தீபாவளி தினத்தில் டீஸர் வெளியீடு, அதனைத் தொடர்ந்து இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடுகளின்  மூலம் படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது.

நத்தார் தின விடுமுறையிலிருந்து பொங்கல் வரை முன்னணி நடிகர்கள் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. அதனால் இந்த படத்தை நத்தார் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

GET UPDATES