நீதியமைச்சரின் கண்டுபிடிப்பு!

2 months agoசர்வதேசமும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையில் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நாட்டில்அரசியல் கைதிகள் என யாருமில்லையெனப் புதிய கண்டுபிடிப்பை நீதியமைச்சர்கண்டுபிடித்துள்ளார்.

எனவே, நீதியமைச்சரின் கருத்து தனிப்பட்ட கருத்துஎன்பதனால் அதனை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமானதர்மலிங்கம் சித்தார்த்தன் நீதியமைச்சருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.

நாட்டில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை' என நீதியமைச்சர் தலதாஅத்துக்கோரள கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினாவிய போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியற் கைதிகள் என்ற ரீதியிலேயே அவர்களின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ச்சியாகஅரசாங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். அவர்களும் அந்த ரீதியில் தான்எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

 அரசியல் கைதிகளைத் தேவையின்றித் தடுத்து வைப்பதில் எந்தப் பயனுமில்லை. அவர்கள்விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பொறுப்பிலுள்ளஅமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ள நிலையில் நீதியமைச்சர் கருத்தை நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

GET UPDATES