ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு!

2 months agoஇலங்கை ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ள போதும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சேவைக்கு திரும்பாத காரணத்தினாலேயே இச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இதனால் மட்டுப்படுத்தபட்ட ரயில்களே சேவையில் உள்ள நிலையில், காலை வேளையில் பணிகளுக்குச் சென்றவர்கள் பெரிதும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இதனால், பேரூந்துகளிலும் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை முதல் ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப் பணிப்புறக்கணிப்பால் ரயில்வே திணைக்களத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES