இயற்கையின் சீற்றம்: வியட்நாமில் 37 பேர் உயிரிழப்பு

2 months agoவியட்நாமில் பெய்துவரும் அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் வெள்ளப் பெருக்கினால் அதிக உயிரிழப்புகள் சம்பவத்திருப்பது இதுவே முதல் முறையாகும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அடை மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் காயமடைந்துள்ளதுடன், நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர்.

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதியிலேயே அதிகளவான சேதங்கள் பதிவாகியுள்ளன.

வெள்ள பாதிப்பிற்குள்ளாகி, தமது முழு கிராமமே நித்திரையிழந்து காணப்படுவதாகவும், இந்த தண்ணீருடன் போராடுவது மிகவும் கடினமாக உள்ளதாகவும் ஹாவோ பின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாம், அடிக்கடி புயல் மற்றும் வெள்ளத்தினால் பேரழிவை சந்தித்து வருகின்ற நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் புயலில் சுமார் 200 பேர்வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES