‘கோலி சோடா 2’ படத்தில் கௌதம் மேனன்!

2 months agoவிஜய் மில்டன் இயக்கி வரும் ‘கோலி சோடா 2’ படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘கோலி சோடா 2’.  படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் படத்தில் கிஷோர், பரத் சீனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

குறித்த படத்துக்காக கதையை எழுதும்போதே, இந்த பாத்திரத்தில் கௌதம் மேனனை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம் விஜய் மில்டன் இதற்கு கௌதமும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

 முன்னதாக, இந்தப் படத்தின் டீஸருக்கு கௌதம் மேனன் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

GET UPDATES