கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

2 months agoஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரம் இருந்து வரும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது மதத்தலைவர்கள் என பல்வேறு தரப்புக்களும் கலந்து கொண்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.

குறித்த போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை உரிய தரப்பினரிடம் சேர்த்து சரியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அரசாங்கள அதிபர் உறுதியளித்துள்ளார்

GET UPDATES