அனுமதிப் பத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்றவர் கைது!

2 months agoஅனுமதிப் பத்திரமின்றி இரண்டு பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் டிக்கோயா பகுதியில் வைத்து நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக்கோயா, புளியாவத்தை தோட்ட பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்று கொண்டிருந்த போதே லொறியை டிக்கோயா பகுதியில் வைத்து இடைமறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அனுமதிப் பத்திரமின்றி இந்த இரு பசு மாடுகளும் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து இரு பசு மாடுகளையும், அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

இதேவேளை, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

GET UPDATES