வேப்ப மரங்களை மறைத்து வைத்திருந்த நபர் கைது!

2 months agoவாழைச்சேனை - ஓட்டமாவடி, ஹிஜ்ரா நகர் பகுதியில் வேப்ப மரங்களை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வாகரை பகுதியில் இருந்து வெட்டப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது அடி நீளம் கொண்ட பழமை வாய்ந்த பதினெட்டு வேப்ப மரங்களை பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோத மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES