நீதிமன்றில் பொலிஸாரை தாக்கிய பெண்!

2 months agoபாணந்துறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது, அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற சாட்சி கூண்டுக்கு அருகில் வைத்து பண்டாரகம பொலிஸ் அதிகாரி சுனில் என்பவர் மீது, பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பெண் நேற்று காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வளாக வாசலில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ள நிலையில், பெண் பொலிஸாரையும் கடுமையாக திட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் கணவர் தொடர்பில் இடம்பெற்ற வழக்கிற்கு வந்தவர் அவரது கணவரையும் தாக்கியுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு வெளியே சென்ற பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறும், மனநல மருத்துவமனைக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

GET UPDATES