5 வருட நரகத்தை தாண்டி பிழைத்து வந்த கனேடிய குடும்பம்..!!

2 months agoகடந்த ஐந்து வருடங்களாக எங்கு இருக்கிறோம் என்று தெரியாமலேயே தீவிரவாதிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய குடும்பத்திற்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது.

கனேடிய கணவர் மற்றும் அவரது அமெரிக்க மனைவி அவர்களோடு மூன்று குழந்தைகள் ஐந்து வருடங்களாக தலிபான் தொடர்புடைய குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

அமெரிக்க பெண்மணி கெயிற்லன் கொல்மன் மற்றும் இவரது கணவர் கனேடியரான ஜோசுவா பொய்லி ஐந்து வருடங்களிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானிற்கு பயணம்செய்த போது ஹக்கானி நெட்வேர்க்கினால் தடுக்கப்பட்டனர்.

கடத்தப்பட்ட போது கொல்மன் கர்ப்பிணியாக இருந்தார். கடத்தப்பட்டிருந்த சமயத்தில் இவர்களிற்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

இவர்கள் எங்கு வைக்கப்பட்டிருந்தனர் என்ற விவரம் வெளியாகவில்லை. இவர்கள் எப்போது வட அமெரிக்காவிற்கு திரும்புவர் என்பதும் எவருக்கும் தெரியவில்லை.


GET UPDATES