பொலிசாரின் எச்சரிக்கை... இருவர் மீது எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயற்சி..?

2 months agoஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்கும் நிலைக்கு முயற்சித்த  சம்பவம் நடந்துள்ளது.

இது சம்பந்தமாக மூன்று சந்தேக நபர்களை தேடும் பொலிசார் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் இரவு நேரத்தில் நடந்திருக்கின்றது.18 வயது மனிதன் வாகன தரிப்பிடத்தினூடாக நடந்து சென்று கொண்டிருக்கையில் மூன்று சந்தேக நபர்கள் தாக்க முற்ப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் இரு ஆண்கள் ஒரு பெண் எனவும், அனைவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று கூறியுள்ளனர் .

முதலில் வாதம் ஆரம்பித்ததாகவும் ஒரு கட்டத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் வாகனத்திற்கு சென்று எரி வாயு கொண்ட தகரம் ஒன்றை வெளியே எடுத்தார்.

பாதிக்கப்பட்ட இருவர் மீதும் எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இவர்களது படங்கள் நேற்று அதிகாரபூர்வமாக  வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை அணுக வேண்டாம் எனவும், இவர்களை  கண்டால் 911ஐ அழைக்குமாறும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
GET UPDATES