பிறந்து வளர்ந்த கனேடிய மண்ணில் குடியுரிமைக்கு போராடும் நபரின் சோகம்..!!

2 months agoகனடாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் பல வருடங்களாக கனடிய குடியுரிமை பெற போராடி வரும் நிலையில், அவரின் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.

ஜோனதன் யோனி கௌபெர்(Jonathan Yoani Kuiper) என்ற இளைஞரின் குடும்பம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்திலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தது.

புலம்பெயர்ந்த சமயத்தில் கௌபெர், 14 மாத குழந்தையாக இருந்தார். Aylmer நகரில் வளர்ந்த கௌபெர், பள்ளிப்படிப்பு, இளநிலை பட்டப்படிப்பு, வேலை என 27 வருடங்கள் கனடாவில் தான் அனைத்தையும் மேற்கொண்டார்.

பின்னர், முதுகலை பட்டப்படிப்பு படிக்க மற்றும் அதற்கு தகுதியான வேலையில் சேர ஐரோப்பாவுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கனடிய குடியுரிமை பெறுவதற்காக கடந்த 2013-ல் கௌபெர் விண்ணப்பித்திருந்தார்.

செயல்முறையில் இருந்த விண்ணப்பம் அடுத்த இரண்டாண்டுகளில் கனடா அரசால் நிராகரிக்கப்பட்டது.

அவரின் விண்ணப்பித்த ஆண்டிலிருந்து கடைசி நான்கு ஆண்டுகள் கனடாவில் வாழவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது.

இதுவரை வாழ்ந்த தனது முக்கால்வாசி வாழ்க்கையை கனடாவில் கழித்திருந்தாலும் அதை அரசு பரீசீலிக்கவில்லை.

இதுகுறித்து கனடாவின் அகதிகள் மற்றும் குடிவரவு வாரியத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் தற்போது நிரந்தர வசிப்பிட தகுதிக்கு ஐந்து வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த மூன்று வருடங்கள் கனடாவில் வாழ்ந்தால் குடியுரிமை கிடைக்கும்.
GET UPDATES