பசில்றாஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது!

2 months agoபசில்றாஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது 

பசில்ராஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது  என  கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்  தெரிவித்துள்ளார் 

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் 

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில்றாஜபக்ச  வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் இருநூறு ஆசனங்களைப் பெறுவோம்  எனத் தெரிவித்துள்ளார் இது தொடர்பில்  உங்களுடைய கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே   கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் அவ்வாறு தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் பசில்றாஜபக்ச  இவ்வாறுதான் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பகல்கனவு கண்டார்  தாங்கள் தான்  பத்துவருடத்துக்கு ஜனாதிபதி என்றெல்லாம் கூறினார்  என்ன நடந்தது வடக்கு கிழக்கு உட்ப்பட நாடு முழுவதிலும் உள்ள மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் நல்லதொரு ஆட்சியை அமைத்தனர் அதன் பின்னர் பசில்றாஜபகச  என்ன செய்தார் அமரிக்காவுக்கு ஓடினார்  அதேபோல்தான் உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததும் அவர் அமரிக்காவுக்கு ஓடிவிடுவார்  அவரது பகல்கனவுகள் ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவத்துள்ளார் 
GET UPDATES