அதிஅற்புத வடிவமைப்புடன் வெளிவந்த புதிய கனேடிய நாணயமா இது..?

2 months agoபருவ காலத்தை உணர்த்தும் வகையில் சரியான நேரத்தில் அனைவருக்கும் பிடித்தமான நாணயத்தை வடிவமைத்துள்ளார் ஒரு புகைப் படப்பிடிப்பாளர்.

டொன் கொமரெச்கா என்ற புகைப் படவியலாளர் இரண்டு வருடங்களாக பல வகையிலான பனித்துகள்களை போன்ற வடிவமைப்பில் நாணயத்தை வடிவமைத்து, இறுதியாக ஒரு பதிப்பு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த வடிவமைப்பில் ஒரு அவுன்ஸ் எடையான 20 டொலர்கள் றோயல் கனடியன் மின்ட் தூய வெள்ளி நாணயத்தில், 13 சிறிய பனித்துகள்கள் சுற்றியிருக்க நடுவில் மூன்று பனித்துகள்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றியுள்ள விளிம்புகள் உண்மையான பனித்துகள்களின் அளவை கொண்டுள்ளன. இவைகள் நம்பமுடியாத அளவிலான விபரங்கள் கொண்டுள்ளதாக ஒன்ராறியோவை சேர்ந்த கலைஞரான கொமரெச்கா தெரிவித்துள்ளார்.

6,000 நாணயங்கள் மட்டுமே மின்ரினால் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு 20 டொலர்கள் நாணயம் டொலர்கள் 113.95ற்கு விற்பனையாகின்றதெனவும் கூறப்பட்டுள்ளது.
GET UPDATES