புலனாய்வு விசாரணை தொடக்கம்... ரொரன்ரோ காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் படுகாயம்..!

2 months ago



கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ரொரன்ரோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யோர்க் வீதிக்கு கிழக்கே, குயீன்ஸ் குவே பகுதியில் பயணித்த மிதிவண்டி ஓட்டுனர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் வீதி சமிக்கை விளக்கு சிவப்பாக ஒளிர்ந்த வேளையிலும், அதனூடாக சென்றுள்ளார்.

அதனை அடுத்து 44 வயதான அந்த நபரை ரொரன்ரோ காவல்துறையினர் கைது செய்ய முயன்ற வேளையில், இரு பகுதியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதன் போது குறித்த அந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் காவல்துறையினர் தொடர்புடைய சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளதை அடுத்து, இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர்,

குறித்த அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ரொரன்ரோ காவல்துறை உத்தியோகத்தரிடமும், இரண்டு சாட்சியங்களிடமும் தகவல்களை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தமமை 1-800-787-8529 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








GET UPDATES