ஜனாதிபதி வருகைக்காக கிளிநொச்சியில் பொலிசார் குவிப்பு!

2 months ago



கிளிநொச்சியில் நாளை ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிசார் வரவளைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களைப்போன்றல்லாது இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே காணப்படுவதுடன், அதிகளவில் பொலிசாரே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.









GET UPDATES