ஜோன் ரொறி மீண்டும் நகரபிதா ஆவதற்கு பலத்த ஆதரவு..!!

2 months agoநேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவில், ரொரன்ரோவின் தற்போதய நகரபிதா ஜோன் ரொறி மறுமுறையும்  நகரபிதாவாக தெரிவு செய்யப்படுவதனை பெருமளவான ரொனரோ வாசிகள் ஆதரிப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜோன் ரொறி மீண்டும் ஒருமுறை ரொரன்ரொ நகரபிதாவாக பதவி வகிப்பதற்கு தகுதியானவர் என்று கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டோரில் 65 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் பெருந்திரளான ஒரு பகுதியினர் இது மாற்றத்திற்கான காலம் என்ற கருத்தினை பதிவு செய்துள்ளனர். இதனை 35 சதவீதம் பேர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 16ஆம் நாளில் இருந்து 19ஆம் நாள் வரையில், ரொரன்ரோவைச் சேர்ந்த 814 பெரியவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இவ்வாறான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரொரன்ரோ நகரபிதாவுக்கான தேர்தலில், நகரபிதாவாக தேர்வாகக்கூடியவர்களின் பட்டியல் ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில்,

ஜோன் ரொறிக்கு 75 சதவீதம் பெற்று முதலிடத்திலும்,

டக் ஃபோர்ட் 36 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும் ,

டெஸ்மண்ட் கோல் 30 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும்,

இசைக் கலைஞர் ட்ரேக 19 சதவீதம் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.

மக்களுக்கான சிறந்த திட்டங்களை யார் முன்வைப்பார்கள் என்று எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்தவர்களில் 48 சதவீதம் பேர் ஜோன் ரொறியையும், 16 சதவீதம் பேர் டக் ஃபோர்ட்டையும் தெரிவு செய்துள்ளனர்.

இதேவேளை யாருக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, டக் ஃபோர்ட்டுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று 53 சதவீதம் பேரும், ஜோன் ரொறிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று 13 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
GET UPDATES