ராகல தோட்ட மக்களுக்கு 30 தனிவீடுகள் கையளிப்பு

2 months agoமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நுவரெலியா மாவட்ட வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ராகல தோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் இன்று (13) கையளிக்கப்பட்டது.
 
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட இத்திட்டத்தை அமைச்சர் பி. திகாம்பரம் தனது நிதியொதுக்கீட்டில் தனிவீடுகளாக மாற்றியமைத்துள்ளார்.
 
இதற்கான காணி உரித்துக்களை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
 
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைவாக சிறுவர்களுக்கான போஷாக்குணவும் வீட்டுத் தோட்டத்துக்கான மரக்கன்று நடுதலும் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
GET UPDATES