அதிமுக அமைச்சர் இவ்வளவு கேவலமா பேசுவாரா..?

2 months agoஅதிமுக ஆட்சியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டெங்கு ஆட்சி என அழைத்து வருவதால், திமுக ஆட்சியை தான் எய்ட்ஸ் ஆட்சி என அழைக்கப்போவதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

இந்த ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயியுள்ளனர்  இந்த அரசு டெங்கு காய்ச்சல் தொடர்பாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதால் மக்களை பற்றி கவலைப்படாமல் உள்ளனர்.

அரசு சம்பந்தப்பட்ட எந்த துறையும் சரியாக செயல்படவில்லை. தகுந்த முடிவுகளை எடுத்து அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குவதற்கான ஆள் இல்லை.

தமிழகத்தில் தற்போது டெங்கு ஆட்சி தான் நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று, தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து, அகிம்சா பட்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணியன், திமுக ஆட்சிக்காலத்தில் தான் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பரவியதாகக் கூறினார்.

ஏற்கனவே அதிமுகவை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதிமுக அமைச்சரின் இந்த பேச்சு மேலும் பொறியை கிளப்புவதாக அமைந்துள்ளது.
GET UPDATES