ஐநாவின் அமைப்பிலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல் திடீர் விலகல்..!!

2 months agoஐநாவின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எந்நேரமும் வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ தன்னுடைய உறுப்பினராக இணைத்துக்கொண்டது. அதன்பிறகு இஸ்ரேல் மீது யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. மேலும், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியையும் குறைக்க ஆரம்பித்தது.

இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பிலிருந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த முடிவு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யுனெஸ்கோவுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்த முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், இஸ்ரேலும் விலகுவதாற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்கவின் இந்த முடிவானது ஐநாவின் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.
GET UPDATES