தாமரை மொட்டுடன் கருகிப் போய்விடுவார் பசில்!

2 months agoகட்சிகளுக்கு கட்சி தாவிச் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிர்வரும் தேர்தலில் தாமரை மொட்டுடன் கருகி போக நேரிடும் என பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்க பசில் ராஜபக்சவே நடவடிக்கை எடுத்தார். கட்சிக்கு கட்சி தாவிச் சென்ற அவர் அந்த கட்சிக்கு தற்போது தலைமை தாங்குகிறார்.

பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தது போல் கட்சியை ஆரம்பித்து நாட்டின் முன்கொண்டு வந்து மொட்டை பூக்க வைக்க முடியும் என இவர்கள் எண்ணுகின்றனர்.

அதனை இவர்களால் செய்ய முடியாது. தாமரை மொட்டு மலராது. பசில் மொட்டுடன் கருகி போய்விடுவார் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.

GET UPDATES