பேரறிவாளனும் சசிகலாவும் ஒன்றா? வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கருணாஸ்.!!

2 months agoஉடல் நலம் சரியில்லாத தனது கணவரை காண, கர்நாடகா சிறையிலிருந்து இரு தினங்களுக்கு முன்பு பரோலில் வெளிவந்த சசிகலா, சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியுள்ளார்.

சசிகலாவுக்கு கர்நாடகா சிறைத்துறை கடுமையான நிபந்தனைகளோடு பரோல் வழங்கியுள்ளது.

இதனால், சசிகலாவை அவரது உறவினர்களை தவிர வேறு யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ், பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தனக்கு ஆச்சரியமளிப்பதாக கூறினார்.

சமீபத்தில் பரோலில் வெளிவந்த பேரளிவாளனுக்கே, அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று கருணாஸ் கூறினார்.

கருணாஸின் இந்த பேட்டி குறித்து, இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக 25 வருடங்களுக்கும் மேல் சிறையில் இருந்தவர் பேரறிவாளன். அவர் இப்போதுதான் பரோல் கிடைத்து வெளியே வந்துள்ளார்.

அவரோடு, ஊழல் குற்றம் நிருபிக்கப்பட்ட சசிகலாவை ஒப்பிடுவது மோசமான செயல் என்று கடுமையாக வசை பாடியுள்ளனர்.
GET UPDATES