நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம்

2 months agoஇலங்கையில் தனியான தமிழீழ நாட்டை உருவாக்குவது உட்பட தீர்வுத்திட்டங்களை வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களை சுயநிர்ணய உரிமைகளுடன் வாழ்வதற்கும், சிங்கள பௌத்த அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கவும் இலங்கையில் தமிழ் மக்களை தமிழீழ நாட்டில் வாழ வைக்க வேண்டும் என்பதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு.

இதற்கு அமைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் தீர்வுத்திட்டத்தை வடக்கு, கிழக்கு மக்கள், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் சக்திகள் ஊடாக முன்வைத்து,

அதனடிப்படையில், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு முன்வைப்பதே நோக்கம் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

GET UPDATES