7,500 உயிர்கள் உடல் கருகி பலி.. பதைபதைக்க வைக்கும் துயரம்..!!

6 days agoகனடாவில் மூன்று பண்ணையில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் 7,500 பன்றிகள் உடல்கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிடோபா மாகாணத்தில் உள்ள Steinbach நகரில் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பண்ணைகள் அமைத்து பன்றிகளை வளர்த்து வந்துள்ளார். மூன்று பண்ணைகளிலும் 9000 பன்றிகள் அடைத்து வைக்கப்பட்டுருந்தன.

இந்நிலையில், அங்கு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. தகவலை பெற்ற வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக இரண்டு பண்ணைகள் ஏற்கனவே எரிந்து சாம்பலாகியுள்ளன. இவற்றில் அடைத்த வைக்கப்பட்டிருந்த 7,500 பன்றிகள் தப்பி வழியின்றி உடல்கருகி பலியாகியுள்ளன.வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மூன்றாவது பண்ணை தீயை அணைத்து அதில் இருந்த 1,500 பன்றிகளை காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய நகராட்சி அதிகாரி ‘பன்றிகள் மூலம் தான் அந்த குடும்பத்தினர் வாழ்க்கையை நடத்தியுள்ளனர்.

தற்போது அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது’ என வேதனை தெரிவித்துள்ளார். தீவிபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
GET UPDATES